ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் ஒன்றாக குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். இதில் வங்கியில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் கும்கியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இவருக்கு ஆப்ரேஷன் செய்ய 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதை தன் நண்பர்களிடம் சொல்லி பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சி செய்கிறார்கள். எங்கு கேட்டும் பணம் கிடைக்காமல் போகிறது. குறித்த நேரத்தில் அவர்களால் பணம் ஏற்பாடு செய்ய முடியாததால் கும்கியின் தாயார் இறந்து போகிறார். இதனால் மனவேதனையில் நான்கு பேரும் குடிபோதையில் கும்கி வேலை பார்க்கும் வங்கியில் இருக்கும் பணத்தை திருடி ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். அதன்படி ஏடிஎம்-ல் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள்.
No artwork of this type.
No artwork of this type.
No artwork of this type.
No artwork of this type.
No artwork of this type.
No artwork of this type.
No lists.
No lists.
No lists.
Please log in to view notes.